உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கந்­த­கோட்ட கும்­பா­பி­ஷேக விழா சிறப்பு பூஜைகள் துவக்கம்!

கந்­த­கோட்ட கும்­பா­பி­ஷேக விழா சிறப்பு பூஜைகள் துவக்கம்!

சென்னை: கந்­த­கோட்டம் முத்­து­கு­மா­ர­சு­வாமி கோவிலில் வரும் 15ம் தேதி கும்­பா­பி­ஷேகம் நடக்க உள்­ளது. அதற்­கான சிறப்பு பூஜைகள் இன்று முதல்
துவங்­கு­கின்­றன. பாரி­முனை ராசப்ப செட்டி தெருவில் புகழ்­பெற்று விளங்கும் கந்­த­ கோட்டம் என்­ற­ழைக்­கப்­படும் முத்­து­கு­மா­ர­சாமி கோவில், 1673ம் ஆண்டு
உரு­வாக்­கப்­பட்­டது. இங்கு, வரும் 15ம் தேதி கும்­பா­பி­ஷேகம் நடை­பெ­ற­வுள்­ளது. கும்­பா­பி­ஷே­கத்தை முன்­னிட்டு ராஜ கோபுரம், மூலவர் மற்றும் மற்ற உற்­சவர் விமா­னங்கள் புதுப்­பிக்கும் பணி முடி­வ­டைந்­துள்­ளது. கும்­பா­பி­ஷே­கத்­திற்­கான யாக­சாலை பூஜைகள் இன்று முதல் துவங்­கு­கின்­றன. யாக­சா­லையில் மொத்தம் 42 குண்­டங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இன்று காலை விக்­னேஸ்­வர, கோ பூ­ஜைகள் நடை­பெ­று­கின்­றன. வரும் 12ம் தேதி மாலை முதல் கால யாக­சாலை பூஜை துவங்­கு­கி­றது. வரும் 15ம் தேதி ஆறாம் கால பூஜை முடிவில் காலை 9:00 மணி முதல் 10:30 மணிக்குள் கும்­பா­பி­ஷேகம்
நடை­பெ­று­கி­றது. அதை தொடர்ந்து மாலையில் தேவ­சேனை திருக்­கல்­யா­ணமும், தங்கம் மற்றும் வெள்ளி ரதங்­க­ளுடன் சிம்மம், யானை, நாகம், மயில், சூர­பத்மன், குதிரை, தங்க தொட்டி, தொட்டி ஆகிய 10 வாக­னங்­களின் புறப்­பாடும் ஒரே நேரத்தில் நடக்­கி­றது. பின் 16ம் தேதி முதல் மண்­ட­லா­பி­ஷேகம் துவங்­கு­கி­றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !