உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருமேற்றளீஸ்வரர் கோவில் பாலாலயம் கோலாகலம்

திருமேற்றளீஸ்வரர் கோவில் பாலாலயம் கோலாகலம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் திருமேற்றளீஸ்வரர் கோவிலில் பாலாலயம் நடந்தது. காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையத்தில், தேவார பதிகங்கள் பெற்ற திருத்தலம் என, அழைக்கப்படும் திருமேற்றளீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு, விநாயகர், ஆறுமுகர், ஒத உருகிஸ்வரர், காளத்தீஸ்வரர், உற்றுகேட்ட முத்தீஸ்வரர், திருஞானசம்பந்தர் ஆகியோருக்கு, சன்னிதிகள் உள்ளன. இக்கோவில், பாலாலயம் நேற்று காலை நடந்தது. இதை முன்னிட்டு, நேற்று முன் தினம் காலை 7:00 மணி முதல், 8:00 மணி வரை, கணபதி பிரார்த்தனை, கணபதி ஹோமமும், மாலை 4:30மணிக்கு, யாகசாலை, அர்ச்சனை, ஹோமமும், அதை தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணிக்கு, பாலாலயம் நடந்தது. திருக்கோவில் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !