நமசிவாய, சிவாயநம இரண்டில் எது சிறந்தது?
ADDED :4567 days ago
பஞ்சாட்சர மந்திரம் ஸ்தூலம், சூட்சுமம் என்று இரண்டு வகைப்படும். நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம். சிவாயநம என்பது சூட்சும பஞ்சாட்சரம். ஆரம்பநிலையில் சமயதீட்சை பெற்றவர்கள் ஸ்தூல பஞ்சாட்சரமும், மேல்நிலை விசேஷ தீட்சை பெற்றவர்கள் சூட்சும பஞ்சாட்சரமும் ஜபம் செய்ய வேண்டும். எது சிறந்தது என்று கேட்பது தவறு. குருவிடம் உபதேசம் பெறுவது தான் முக்கியம். இரண்டுமே சகலநலன்களையும் தரவல்லவை.