விநாயகர் சதுர்த்தி, சங்கடஹரசதுர்த்தி இரண்டுக்கும் உள்ள வேறுபாடு!
ADDED :4517 days ago
வளர்பிறை சதுர்த்தி சாதாரண சதுர்த்தி. தேய்பிறை சதுர்த்தி சங்கடஹர சதுர்த்தி. ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி விநாயகர் சதுர்த்தி. இப்படி மூன்றுவகையாக உள்ளது. வளர்பிறை சதுர்த்தியில் சாதாரணமாக விநாயகர் வழிபாடு செய்யலாம். சங்கடஹர சதுர்த்தியில் விரதமிருந்து, இரவில் விநாயகரை வழிபட்டால் எல்லா செயல்பாடுகளிலும் தடைகள் நீங்கி வெற்றி பெறலாம். ஆவணிமாதம் விநாயகர் சதுர்த்தி விநாயகரின் பிறந்தநாள் என்பதால் ஒட்டுமொத்தமாக எல்லாரும் கொண்டாட வேண்டும்.