இவரே தான் அவரு! அவரே தான் இவரு!
ADDED :4569 days ago
வங்காளத்தில் ராமாயணத்தை எழுதியவர் கிருத்திவாசர். இவர் மூலக்கதை ராமாயணத்தில் பலவித மாற்றங்களைச் செய்து, தனது கதையை அமைத்திருக்கிறார். பஞ்சமுக ஆஞ்சநேயர், மயில்ராவணனை சம்ஹாரம் செய்தது பற்றி விரிவாக அதில் கூறியுள்ளார். குகன் ராமரிடம், ராமா! இப்பூலோகத்தில் மீண்டும் கிருஷ்ணராக அவதரித்து தர்மத்தை நிலைநாட்டுவாயாக என்று வேண்டுவதாகக் கூறுகிறார். சீதாராம திருமணம் பற்றி சொல்லும்போது, சிவபார்வதியே சீதாராமராக உலகிற்கு வந்து விளையாடல் புரிந்ததாக குறிப்பிடுகிறார்.