உத்தரகண்ட் கோயில்கள் புதுப்பிக்க ராமேஸ்வரத்தில் யாகம்
ADDED :4484 days ago
ராமேஸ்வரம்:உத்தரகண்ட் மாநிலம் கேத்தார் உள்ளிட்ட பல புனித தலங்கள், வெள்ளத்தால் சேதமடைந்தன. இவற்றை விரைவில் புதுப்பிக்கவும், அதுவரை கோயிலில் பூஜை, அபிஷேகம் நடத்தி, மக்களிடம் அமைதி ஏற்பட வேண்டி, ராமேஸ்வரம் சிருங்கேரி மடத்தில், காயத்ரி பரிவார் இயக்கம் சார்பில், காயத்ரி பூஜை, யாகம் நடந்தது. பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் முரளீதரன், நகர் தலைவர் முத்துசெல்வம், முன்னாள் கவுன்சிலர் சுந்தரம் பலர் இருந்தனர்.