நட்சத்திர பூஜை!
ADDED :4464 days ago
மகாபலியிடம் தானம் பெறுவதற்காக திருவடியால் உலகளந்த பெருமாளை, ஓங்கி உலகளந்த உத்தமன் என்று ஆண்டாள் போற்றுகிறாள். அவர் விஸ்வரூபம் எடுத்து தலைவானைத் தொட்ட போது, நட்சத்திரங்கள் முத்துப்பந்தலைப் போல அவரது கிரீடத்தின் மேல் ஜொலித்தன. அதற்கு மேலும் அவர் வளர்ந்த போது, முத்துமாலை போல சுழன்றன. அதற்கு அப்பால் வளர்ந்ததும், இடுப்பில் ஒட்டியாணம் போல் ஒட்டிக் கொண்டன. இறுதியில் அவர் திருவடியில் சிலம்புகளாக அணி செய்தன. வேதாந்த தேசிகர் தன்னுடைய தேஹளீச ஸ்தவம் என்னும் நூலில் நட்சத்திர மண்டலம் விஷ்ணுவை பூஜித்த விதத்தை இப்படி வர்ணித்துள்ளார்.