முனீஸ்வரர் கோயிலில் ஆடி வெள்ளி விழா
ADDED :4492 days ago
நரிக்குடி: நரிக்குடி முக்குரோடு முனீஸ்வரர் கோவில் ஆடி வெள்ளி பொங்கல் திருவிழா நடந்தது. காலையில் ஸ்ரீமுனீஸ்வரர் கோவிலிலிருந்து ஈஸ்வரன் கோவிலுக்கு தீர்த்தம் எடுத்து வரப்பட்டது. அது சமயம் நரிக்குடி விநாயகர், ஸ்ரீஅழகுமீனாள், வெட்டுடையாள் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மதியம் பக்தர்கள் மற்றும் கிராம மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கோவிலில் பொங்கல் வைத்து ஸ்ரீமுனீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மறுநாள் கோவிலில் ஆடு, கோழி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.