உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆண்டாள் கோவில் ஆடி விழா துவக்கம்

ஆண்டாள் கோவில் ஆடி விழா துவக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் ஆடிப்பூர திருவிழா, நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவை முன்னிட்டு, ஜூலை 30 ல், தேங்காய் தொட்டு நியமனம் பெறுதல் நடந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று காலை, கருடாழ்வார் முத்திரை பதிக்கப்பட்ட கொடி, ஏற்றப்பட்டது. இரவு 11:00 மணிக்கு, பதினாறு வண்டி சப்பரத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் பவனி வந்தனர். சென்னையை சேர்ந்த, பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு, அழகர் முத்திரை பொறித்த டாலருடன் கூடிய, 20 பவுன் செயினை காணிக்கையாக செலுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !