கைலாஷ் மானசரோவர் யாத்திரை ரத்து
ADDED :4531 days ago
உத்தரகண்ட் மழை வெள்ளத்தால், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்துள்ளதை அடுத்து, கைலாஷ், மானசரோவர் புனித யாத்திரை, ரத்து செய்யப்பட்டுள்ளது. திபெத்தில் உள்ள கைலாஷ் மலை மற்றும் அங்குள்ள மானசரோவர் நதியில் நீராட, இந்துக்கள், ஆண்டுதோறும் புனிதப் பயணம் மேற்கொள்வது வழக்கம். மத்திய அரசின் சார்பில், பக்தர்களின் புனிதப் பயணத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். இந்நிலையில், உத்தரகண்டில் கடந்த ஜூன் மாதம் பெய்த கன மழை மற்றும் வெள்ளத்தால், பெரும்பாலான சாலைகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து, இந்த ஆண்டிற்கான, கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை ரத்து செய்யப்படுவதாக, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.