நீலமங்கலம் சிவன் கோவிலில் 108 தாலிகயிறு சிறப்பு பூஜை
ADDED :4508 days ago
கள்ளக்குறச்சி : நீலமங்கலம் துர்கையம்மனுக்கு 108 தாலி கயிறு சிறப்பு பூஜைகள் ஆக 2 நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் ஆடி மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு துர்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் 16 வகையான அபிஷேகங்களுக்கு பின், 108 தாலி கயிறுக்கு மாங்கல்ய தேவதை ஆவாகனம் செய்தனர். பின்னர், 8 வகையான பூக்களால் பூஜைகள் செய்து, துர்கையம்மனுக்கு சாற்றினர். லலிதா சகஸ்ரநாம மந்திரங்கள் வாசித்து குங்கும அர்ச்சனை செய்யப்பட்டது. பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் வேண்டி 108 தாலி கயிறு சுமங்கலி தாம்புலத்துடன் வழங்கப்பட்டது. மாலை சீத்தாலட்சுமண, அனுமன் சமேத கோதண்டராமன் கோவிலில் 108 விளக்கு பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை நீலமங்கலம் கிராம மக்கள் செய்திருந்தனர்.