உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரதா ஆசிரம விழா

சாரதா ஆசிரம விழா

உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்தில், சுவாமி விவேகானந்தரின், 150ம் ஆண்டு ஜெயந்தி விழா, குருகுலத்தின், 25ம் ஆண்டு போட்டோ ஆல்பம் வெளியீடு, இந்தியாவின் மகிமை என்ற கண்காட்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டுதல், ஆகிய முப்பெரும் விழா நேற்று நடந்தது.  உளுந்தூர்பேட்டை சாரதா ஆசிரமத்திற்கு வந்த, கவர்னர் ரோசய்யா, சுவாமி விவேகானந்தரின், வெண்கலச் சிலையை திறந்து வைத்தார். முப்பெரும் விழாவிற்கு, சாரதா ஆசிரம தலைமை மாதாஜி யத்தீஸ்வரி ராமகிருஷ்ண ப்ரியா அம்பா தலைமை தாங்கினார். ராமகிருஷ்ணா ஆசிரம தலைவர் அனந்தானந்தஜி மகாராஜ் அறிமுகவுரை நிகழ்த்தினார். சாரதா ஆசிரம மேலாளர் யத்தீஸ்வரி அனந்தப்ரேம ப்ரியா அம்பா வரவேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !