குன்றத்தில் 5 மூலவர்களையும் இலவசமாக தரிசிக்க ஏற்பாடு
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 5 மூலவர்களையும் இலவசமாக தரிசிக்க, கோயில் துணை கமிஷனர் பச்சையப்பன் உத்தரவிட்டார். இக்கோயில் மூலஸ்தானத்தில் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை, சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் சிலைகள், மலை அடிவார பாறையில் குடைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு கட்டணம் செலுத்தும் பக்தர்கள் மட்டுமே, 5 மூலவர்களையும் தரிசிக்க முடியும். இலவச தரிசனம் செல்லும் பக்தர்கள், சுப்பிரமணிய சுவாமி, துர்க்கை, கற்பக விநாயகரை மட்டுமே தரிசிக்க முடியும். அவர்களும் ஐந்து மூலவர்களையும் இலவசமாக தரிசிக்க, கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என "தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது.இதன் எதிரொலியாக, துணை கமிஷனர் பச்சையப்பன் உத்தரவுபடி, நேற்றுமுதல் ஐந்து மூலவர்களையும் இலவசமாக தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்பு கட்டண தரிசன பக்தர்கள் கம்பத்தடி மண்டபம், இரட்டை விநாயகர், மகா மண்டபம் வழியாக மூலஸ்தானத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். மூலவர்களை தரிசித்து வெளியேறும் பகுதியில் "ஏசிக்கான இரும்பு பெட்டியின் உயரம் குறைவாக உள்ளதால், உயரமாக உள்ளவர்கள் தலையில் தட்டுகிறது. அதனால், பக்தர்களை சுப்பிரமணிய சுவாமிக்கு எதிரே உள்ள பாதையில் அனுப்பி, வலதுபுறம் திருப்பி சண்முகர் சன்னதிக்கு செல்ல ஏற்பாடு செய்லாம். தேங்காய் உடைக்க தனி இடம்ஒதுக் கலாம். கம்பத்தடி மண்டபத்திலிருந்தே பக்தர்கள் வரிசையாக செல்ல தடுப்பு அமைக்க வேண்டும்.