உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் ஆண்டு பெருவிழா

மாரியம்மன் கோவில் ஆண்டு பெருவிழா

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகேயுள்ள அகஸ்தியம்பள்ளி பக்தர்குள மாரியம்மன்கோவில் ஆண்டு பெருவிழா கடந்த பத்து நாட்களாக நடந்தது. விழாவின் நிறைவாக நேற்று முன்தினம் இரவு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் அம்மன் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வீதியுலா வந்தார். இதில் பெண்கள் மாவிளக்கு, பால் காவடி போன்ற நேர்த்திக் கடன்களை செலுத்தி அம்மனை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை வேதாரண்யேஸ்வரர் கோவில் செயல்அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர். எம்.எல்.ஏ., காமராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற பொருளாளர் அம்பிகாதாஸ் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !