புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் முத்துப்பல்லக்கு திருவிழா கோலாகலம்!
ADDED :4473 days ago
தஞ்சாவூர்: புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில், 90வது ஆண்டு முத்துப்பல்லக்கு திருவிழா நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. மின்னொளியில் ஜொலித்த முத்துப்பல்லக்கை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முத்துப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் முத்துமாரியம்மன் எழுந்தருளி காட்சியளித்தார்.