உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஸ்ரீவில்லிபுத்தூர் , பழநி கோயிலில் போலீசார் வெடிகுண்டு சோதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் , பழநி கோயிலில் போலீசார் வெடிகுண்டு சோதனை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், பழநி மலைக்கோயில்களில் சுதந்திரதினத்தை யொட்டி, வெடி குண்டு தடுப்பு பிரிவு போலீசார், சோதனை நடத்திவருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், வடபத்ரசாயி கோயில்களுக்கு, அடிக்கடி வெடிகுண்டு  மிரட்டல்கள் வந்ததால், "மெட்டல் டிடெக்டர் கருவி, நுழைவு வாயிலில் பொருத்தப்பட்டு, பக்தர்கள் கடும் சோதனைக்கு பின், அனுமதிக்கப்படுகின்றனர். சுழல் கேமிராக்கள் மூலமும், கண்காணிக்கப்படுகிறது.இந்நிலையில், ஆக.,15 ல், சுதந்திர தினத்தையொட்டி, வெடிகுண்டு தடுப்பு பிரிவு எஸ்.ஐ., முருகேசன் தலைமையில், இக்கோயில்களில் போலீசார், வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல், பழநி மலைக்கோயிலில் வெளிப்பிரகாரங்கள், வின்ச் ஸ்டேஷன், படிப்பாதை, யானைப்பாதை, திருஆவினன்குடி கிரிவீதிபாதை, சன்னதி வீதி, பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் வரும் வாகனங்கள் கடுமையாக சோதனை செய்யபடுகிறது. மேலும், பெரியநாயகியம்மன், மாரியம்மன் கோயில், பெருமாள் கோயில்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.  ரயில்வே ஸ்டேஷனில் எஸ்.ஐ.,சசிதரன் தலைமையிலான போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படைவீரர்களும், பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். டி.எஸ்.பி., குப்புராஜ் கூறுகையில்,""சுதந்திர தினத்தையொட்டி, மலைக்கோயில் உட்பட அனைத்து இடங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பழநி- கொடைக்கானல் ரோட்டில் வாகன சோதனை நடக்கிறது, என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !