பக்தர்கள் பாதயாத்திரை
ADDED :4517 days ago
அழகர்கோவில் :புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரை சேர்ந்த பக்தர்கள், அழகர்கோவில் மலை மீது உள்ள சோலைமலை முருகன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நேற்று முன்தினம் வந்தனர். 108 பேர் பால், பன்னீர், மயில் காவடிகள் எடுத்து வந்தனர். உற்சவர் முருகன், வள்ளி, தெய்வானைக்கு பால், சந்தனம், விபூதி, பஞ்சாமிர்தம் என 36 வகை அபிஷேகங்கள் நடந்தன. பகலில் சுவாமி புறப்பாடு நடந்தது. ஏற்பாடுகளை, இலுப்பூர் திருமுருக வார வழிப்பாட்டு சபைத் தலைவர் பொன்முத்துவிநாயகம், செயலாளர் சந்தானம், பொருளாளர் சேகர் செய்திருந்தனர்.