கும்பாபிஷேகத்திற்கு நிதியுதவி
ADDED :4453 days ago
புதுச்சேரி : அகோர மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்காக, மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை சார்பில், 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதியுதவியை, மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன் மற்றும் குடும்பத்தினர் வழங்கினர். மேலும், மண்டல பூஜையில் பங்கேற்று, கோவில் பிரகாரத்தில் தேர் இழுத்து, அம்மனை தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில், கோவில் தலைவர் கதிரவன், ராமதாஸ், துளசிதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.