விநாயகர் சிலைகள் தயார்
கண்டமங்கலம் : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, டி.புதுக்குப்பத்தில் மூன்று அடி முதல், 15 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. கண்டமங்கலம் ஒன்றியம் திருமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட டி.புதுக்குப்பம் கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு, கண்ணை கவரும் பல வண்ணங்களில் விநாயகர் சிலைகளை செய்து, விற்பனை செய்து வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் 9ம் தேதி வருவதையொட்டி, இந்த ஆண்டு முன்கூட்டியே சிலைகள் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட பகுதிகளுக்கு அனுப்புவதற்காக, மூன்று அடி உயரம் முதல் 15 அடி வரையிலான விநாயகர் சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. காரைக்கால்: விநாயகர் சதுர்த்தியையொட்டி காரைக்கால் நிரவியில், 3 அடி உயரம் முதல் 12 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் தயாராகிறது. பேப்பர், கிழங்கு மாவு கூழ் கொண்டு சிலைகள் தயாரிக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணி நடந்து வருகிறது. சிங்க வாகனம், எலி வாகனம், ரிஷப வாகனம் மீது என பலவித வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாராகும் விநாயகர் சிலைகளை, நாகை, திருவாரூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.