கொள்ளாபுரி அம்மன் கோவில் ஆடிப்பூர விழா
ADDED :4452 days ago
பள்ளிப்பட்டு:கொள்ளபுரி அம்மன் கோவிலில், ஆடிப்பூர திருவிழா நடந்தது. பள்ளிப்பட்டு பேருந்து நிலையம் அருகே, உள்ள கொள்ளாபுரி அம்மன் கோவிலில், ஆடிப்பூர திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி, மூலவர் அம்மனுக்கு காலை, சிறப்பு அபிஷேகம், மலர் அலங்காரம் செய்து பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கிராமத்தில் உள்ள பெண்கள் கோவில் வளாகத்தில் கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், மதியம், பொங்கல் வைத்து மாவு விளக்கு ஏற்றியும் அம்மனை வழிபட்டனர். கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு, உற்சவர் அம்மன் மங்கள வாத்தியங்களுடன், வாணவேடிக்கையுடன் திருவீதியுலா நடந்தது.