பிரம்ம அம்சத்துடன் கணபதி!
ADDED :4479 days ago
சென்னை - கொல்கத்தா நெடுஞ் சாலையில், காரனோடை பாலத்தை அடுத்துள்ள நத்தம் பகுதியில், கோயில் கொண்டிருக்கிறார் வாலீஸ்வரர். இங்குள்ள விநாயகர் வித்தியாசமான கோலத்தில் அருள்கிறார். ருத்ராட்ச மாலை, மழு, தந்தம் மற்றும் மோதகம் ஏந்தியபடி, பிரம்ம அம்சமாக திகழ்கிறார் இவர். விக்னங்களைக் களைந்து பக்தர்களுக்கு காரியஸித்தி அளிப்பதால், இவருக்கு காரிய ஸித்தி கணபதி என்று திருநாமம்!