உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பக்தர்கள் ஏமாற்றம்

பழநியில் பக்தர்கள் ஏமாற்றம்

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயில் ரத வீதியில் ஒருவர் இறந்ததால், ஆடி கடைசி வெள்ளி தேரோட்டம் நடக்கவில்லை. தேர் நிலையிலேயே நிறுத்தப்பட்டது. நான்குரதவீதிகளிலும் கூடியிருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். பழநி பெரியநாயகியம்மன் கோயில் ஆடித்திருவிழாவில், முக்கிய நிகழ்ச்சியான, ஆடி கடைசி வெள்ளித்தேரோட்டம், நேற்றிரவு நான்கு ரத வீதிகளில் நடக்க இருந்தது. நேற்றிரவு தேரடியைச் சேர்ந்த நாகராஜ்,65. உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். இதனால் வெள்ளித்தேர், இரவு 8.30 மணிக்கு நிலையிருந்து சில அடிகள் மட்டும் நகர்த்தப்பட்டு, பெரியநாயகிஅம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. தேரோட்டம் நடக்கவில்லை. நான்கு ரத வீதிகளிலும் வெள்ளிதேரோட்டத்தை காண கூடியிருந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !