உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மதுரைக்கு எழுந்தருளிய மாணிக்கவாசகர்

மதுரைக்கு எழுந்தருளிய மாணிக்கவாசகர்

மேலூர் : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்து வரும் ஆவணி மூலத் திருவிழாவிற்கு, திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகர் ஆக 16 புறப்பட்டார்.திருவிழாவின் ஒருபகுதியாக நரியை பரியாக்கிய லீலைக்காக அவர், திருவாதவூர் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் புறப்பட்டார். மதுரை புட்டுதோப்பில் நடக்கும் புட்டு திருவிழாவிலும் எழுந்தருளும் இவர், பல்வேறு மண்டபங்களில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து, 10 நாட்களுக்கு பின், மீண்டும் திருவாதவூர் திரும்புகிறார். ஏற்பாடுகளை கோயில் இணை கமிஷனர் ஜெயராமன்,பேஸ்கார் ஜெயபிரகாஷ் செய்து வருகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ஆவணி மூலத்திருவிழாவில், பட்டாபிஷேகம் நடந்தது. பட்டம் சூட்டிய சுந்தரேஸ்வரர், பிரியாவிடையுடன் எழுந்தருளினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !