உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஹயக்ரீவர் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி

ஹயக்ரீவர் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி

புதுச்சேரி:முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் கருட சேவை நடந்தது.முத்தியால்பேட்டை ராமகிருஷ்ணா லட்சுமி ஹயக்ரீவர் கோவில் 42வது பிரம்மோற்சவம் கடந்த 11ம் தேதி துவங்கியது. திருமஞ்சனம், ஹோமம், சேவை சாற்றுமுறை நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு, கருட சேவை நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (17ம் தேதி) திருக்கல்யாணம் மற்றும் யானை வாகனத்தில் சாமி வீதியுலா, 19ம் தேதி வெண்ணைத்தாழி, 20ம்தேதி காலை 7:30 மணிக்கு மேல் ஹயக்ரீவர் ஜெயந்தி திருத்தேர் விழா நடைபெறுகிறது. மாலையில் சாற்றுமுறை நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி மற்றும் பெருமாள் பக்த ஜன சபையினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !