புத்துமாரியம்மன் கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED :4455 days ago
திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் அடுத்த அரகண்டநல்லூர் புத்து மாரியம்மன் மற்றும் மார்க்கெட் கமிட்டி வளா கத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் ஆடிமாத பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. ஆக 16 காலை 8 மணிக்கு ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள புத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், சந்தனகாப்பு அலங்காம் நடந்தது. சக்திகரகம் எடுத்து வரப்பட்டது. வேண் டுதல் உள்ள பக்தர்கள் கூழ் எடுத்து வந்தனர். சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு கூழ் வழங்கினர்.இதேபோல் மார்க்கெட் கமிட்டி அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது.