தெப்பக்குளம் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக கால் நட்டு விழா
தூத்துக்குடி: தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக கால் நட்டு விழா நடந்தது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் பல லட்ச ரூபாய் செலவில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடையும் நிலையில் உள்ளது. மேலும் முன்புறம் ராஜகோபுரமும், தென்புற வாசலில் சாலை கோபுரமும், புதியதாக கட்டப்பட்டு வருகிறது. திருப்பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் 11ம் தேதி கும்பாபிஷேகம் நடப்பதை ஒட்டி கோவிலில் கால்நட்டு விழா நடந்தது. முன்னதாக சிவன் கோவில் அர்ச்சகர் செல்வம் பட்டர் தலைமையில் கோவில் பட்டர்கள் சதாசிவ பட்டர், குருகைலாசம் பட்டர் ஆகியோர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். விழாவில் தூத்துக்குடி மாநகர மேயர் சசிகலா புஷ்பா, கோலில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், முன்னாள் நிர்வாக அதிகாரி கோபாலன், கோவில் கும்பாபிஷேக கமிட்டி செயலாளரும், பொருளாளருமான வக்கீல் சண்முகசுந்தரம், கவுன்சிலர்கள் வீரபாகு, சரவணன், ஜெயகுமார், முபாரக்ஜான், பஞ்., கழக செயலாளர் ஜீவா பாண்டியன், வட்ட செயலாளர் சாமுவேல், சிவன் கோவில் கணக்கர் சண்முகசுந்தரம் மற்றும் கோவில் இளைஞர் அணியினர், மகளிர் அணியினர், வழிபாட்டு குழுவினர், உழவார பணி குழுவினர், உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.