வழிபாடு இல்லாத கிராம கோவில்களுக்கு விமோசனம்!
காஞ்சிபுரம்: அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கிராம கோவில்களும்,ஒரு கால பூஜை கோவில்களுக்கானபட்டியலில் இடம் பெற்று, அரசின் வைப்பு தொகையை பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், சோழ, பல்லவ மன்னர்களின் ஆட்சி காலத்தில், சிவாலயங்கள் மற்றும் பெருமாள் கோவில்கள் கட்டப்பட்டன. இந்த வகையில், மாவட்டத்தில் 3,868 கோவில்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இவற்றில், கிராம கோவில்களும் அடக்கம்.353 கோவில்கள்இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில், 1,195 கோவில்கள் உள்ளன. இவற்றில், 353 கோவில்கள், ஒரு கால பூஜை நடைபெறும் கோவில்களாக உள்ளன. இவை, அறநிலையத்துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில், தனியார் நிர்வாகிகள் பராமரித்து வருகின்றனர். இந்த கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் மூலம் வருவாய் கிடைக்கிறது. இந்த தொகையை, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளரின் ஒப்புதலுக்கு பின், பூஜை செலவுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.வருமானம் இல்லாத கோவில்களுக்கு, அரசு நிதி உதவி அளிக்கிறது. இதன்படி, ஒரு கால பூஜை கோவில்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள கோவில்களுக்கு, அறநிலைய துறை மூலமாக, 75 ஆயிரம் ரூபாயும், நன்கொடையாளர்கள் மூலமாக, 25 ஆயிரம் ரூபாயும் சேர்த்து, ஒரு லட்சம் ரூபாய், வங்கியில் வைப்பு தொகையாக செலுத்தப்படும். இந்த வைப்பு தொகையில் இருந்து கிடைக்கும் வட்டி மூலம், ஒரு கால பூஜைக்கான செலவுகள் சமாளிக்கப்படும்.வருவாய் இல்லைஇந்த திட்டம், அறநிலைய துறையின், ஒரு கால பூஜை கோவில்கள் குறித்த பட்டியலில் இடம் பெற்ற கோவில்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆனால், மாவட்டத்தில் பல கிராம கோவில்கள், ஒரு கால பூஜை கூட நடக்காமல் உள்ளன.கும்பாபிஷேகம் நடந்து, பல ஆண்டுகள் கடந்து விட்டன. பழமையான இந்த கோவில்களில் பல, பரம்பரை நிர்வாகத்தில் இருந்து வந்தாலும், வருவாய் இல்லாததால், பூஜைகள் தடைபட்டுள்ளன. இதுகுறித்து, திருக்கோவில்கள் வழிபாட்டு குழு நிர்வாகி ஒருவர் கூறுகையில், ""மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டுள்ள கோவில்களை பராமரிக்கும் வகையில், அப்போது இருந்த குறுநில மன்னர்கள், விளக்கு எரிக்க, பூஜை செலவினத்திற்கு, குறிப்பிட்ட நிலங்களை தானமாக அளித்துள்ளனர். பிற்காலத்தில், தனவந்தர்கள் பலரும் சொத்துக்களை தானம் அளித்துள்ளனர். ஆனால், அந்த சொத்துக்கள் மாயமாகி வருகின்றன. இதனால், தற்போது, வருவாய் இல்லாமல், பெரும்பாலான, பழமையான கிராம கோவில்கள் சீரழிந்து காணப்படுகின்றன. இவற்றின் சீரமைப்பு மற்றும் பூஜைகள் கேள்விகுறியாக உள்ளன, என்றார்.விண்ணப்பிக்கலாம்இதுகுறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கிராமங்களில் உள்ள பிரதான கோவில்கள், ஒரு கால பூஜை கோவில்கள் பட்டியலில் சேர்க்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராம கோவிலாக இருந்தாலும், அதை பராமரிக்க முடியாமல் போனால், ஒரு கால பூஜை கோவில்கள் கணக்கில் சேர்க்க சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகிகள் விண்ணப்பிக்கலாம். அதன்பேரில், உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும், என்றார்.