உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலுக்காணத்தம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா

துலுக்காணத்தம்மன் கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா

இள்ளலூர்: இள்ளலூர் துலுக்காணத்தம்மன் கோவிலில், கூழ் வார்த்தல் திருவிழா சிறப்பாக நடந்தது.திருப்போரூர் அடுத்த, இள்ளலூர், பெரியார் நகரில், துலுக்காணத்தம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், கூழ் வார்த்தல் திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. பகல் 1:00 மணிக்கு, கூழ் வார்த்தல் நிகழ்ச்சியும், 2:00 மணிக்கு, கரக குடங்களின் ஊர்வலம் நடந்தது.வீடுகள் தோறும், மங்கள கோலமிட்டு, வேப்பிலை, மா தோரணமிட்டு, வழிபட்டனர். தப்பாட்டம் மற்றும் இன்னிசை வாத்திய கச்சேரி நடந்தது. இரவு, அம்மன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !