உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெல்லையில் ரிக், யஜூர் வேத ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்

நெல்லையில் ரிக், யஜூர் வேத ஆவணி அவிட்டம் கொண்டாட்டம்

திருநெல்வேலி: நெல்லையில் ரிக், யஜூர் வேத ஆவணி அவிட்டம் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ரிக், யஜூர் வேதங்களுக்கான ஆவணி அவிட்டம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு நெல்லை ஜங்ஷன் கைலாசபுரம் கைலாசநாதர் கோயில், குறுக்குத்துறை படித்துறை, நெல்லை டவுன், பாளை., திம்மராஜபுரம், கொட்டாரம், பெருமாள்புரம், தியாகராஜநகர், சங்கர்நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிராமணர்கள் வேதமந்திரம் ஜெபித்து, ஹோமம் வளர்த்து, புணூல்களை மாற்றி, புதிதாக அணிந்து கொண்டனர். புணூல் அணிந்து கொண்டவர்கள் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். கோயில்களுக்கு சென்றும் சுவாமி தரிசனம் செய்தனர். காயத்ரி மந்திரம் ஜெபம் இன்று (21ம் தேதி) நடக்கிறது. இதே போல் விஸ்வகர்மா, செட்டியார், வேளார், சவுராஷ்டிரா ஆகிய புணூல் அணிந்து கொள்ளும் மற்ற இனத்தவர்களும் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு புணூல் அணிந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !