ஓம்சக்தி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா கோலாகலம்
ADDED :4501 days ago
திருப்போரூர்: சந்தனாம்பட்டு ஓம்சக்தி அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா சிறப்பாக நடந்தது. திருப்போரூர் அடுத்த, சந்தனாம்பட்டு கிராமத்தில், ஓம்சக்தி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்கு, இரண்டாம் ஆண்டு தீமிதி திருவிழா, கடந்த 15ம் தேதி, காப்பு கட்டுதலுடன் துவங்கியது. 16ம் தேதி, பால்குடம் ஊர்வலம் மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து, 18ம் தேதி மாலை 6:00 மணிக்கு, தீமிதி திருவிழா நடந்தது. பக்தர்கள் விரதம் இருந்து, தீ மிதித்தனர். இரவு 9:00 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா வரும் வைபவம் நடந்தது. 19ம் தேதி, அர்ச்சுனன் தபசு நாடகம் நடந்தது. நேற்று விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவடைந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.