சித்தானந்தா கோவிலில் காயத்ரி ஜெபவைபவம்
ADDED :4445 days ago
புதுச்சேரி: கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில்நடந்த, காயத்ரி ஜெப வைபவத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.ரிக், யஜூர் வேதங்களைச் சேர்ந்தவர்களுக்குஆவணி அவிட்டம் என்னும் பூணூல் மாற்றிக் கொள்ளும் வைபவம், இக்கோவிலில் விமர்சையாக நடந்தது.இதில், 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பூணூல் மாற்றிக் கொண்டனர்.இதையடுத்து, காயத்ரி ஜெப வைபவம், கருவடிக்குப்பம் சித்தானந்தா சுவாமி கோவிலில் நேற்று நடந்தது. இதனையொட்டி, காலை 5.00 மணிக்கு காயத்ரி வேள்வி துவங்கியது.ராஜா சாஸ்திரிகள், காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க, வேள்வியில் பங்கேற்றவர்கள் தொடர்ந்து 1008 முறைகாயத்ரி மந்திரத்தை உச்சரித்தனர். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 300பேர் பங்கேற்றனர்.