திருமலைக்கேணியில் பவுர்ணமி பூஜை
ADDED :4445 days ago
சாணார்பட்டி: திருமலைக்கேணி சுப்பிரமணியசாமி முருகன் கோயிலில் பவுர்ணமி பூஜை விழா நடந்தது. சுற்றுப்புற கிராமம் மற்றும் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் கோயிலில் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி நெய் விளக்கேற்றி முருகபெருமானை தரிசனம் செய்தனர். இங்குள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோயில் அறநிலையத் துறை நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.