சின்னசேலம் புனித தெரசாள் ஆலய பவள விழா கொண்டாட்டம்
ADDED :4685 days ago
சின்னசேலம்: சின்னசேலம் புனித தெரசாள் ஆலயத்தின் பவள விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சின்னசேலத்தில் உள்ள புனித தெரசாள் ஆலயம் கடந்த 1938ம் ஆண்டு துவங்கப்பட்டது. ஆலயம் துவங்கி, 75 ஆண்டுகள் முடிந்ததையொட்டி பவள விழா கொண்டாடப்படுகிறது. கடந்த 19ம் தேதி அருட்பணி ஜோசப்ராஜ், அருள்தாஸ் கொடியேற்றி பவள விழாவை துவக்கி வைத்தனர். தினம் திருப்பலி, மறையுறை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்கின்றனர். வண்ண மலர்களால் அலங்கரித்த தேர் பவனி வீதியுலா நடந்தது. இன்று மாலையில் கூட்டுத்திருப்பலியை ஆனந்தராயர் நடத்தி வைக்கிறார். இரவு தேர்பவனி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பங்குதந்தை லூர்து ஜெயசீலன், அருட்சகோதரிகள், பவள விழா குழுவினர் மற்றும் கிளைப் பங்கு மக்கள் செய்தனர்.