வன்னிய பெருமாள் கோவிலில் வைணவ சமயசொற்பொழிவு
ADDED :4459 days ago
புதுச்சேரி: வன்னிய பெருமாள் கோவிலில் வைணவ சமய சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.முதலியார்பேட்டை வன்னிய பெருமாள் கோவில் வளாகத்தில், ஸ்ரீமத் ராமானுஜ நாவலர் சுவாமிகள் மன்றம் சார்பில் நடந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில், "வேத முதல்வன் என்ற தலைப்பில் உ.வே. பிரசன்ன வேங்கடாசாரியார் சுவாமிகள் சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.