உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மன்­னா­ரீஸ்­வரர் கோவிலில் மண்­ட­லா­பி­ஷேக விழா

மன்­னா­ரீஸ்­வரர் கோவிலில் மண்­ட­லா­பி­ஷேக விழா

திருத்­தணி: மன்­னா­ரீஸ்­வரர் கோவிலில், மண்­ட­லா­பி­ஷேக விழாவை, முன்­னிட்டு, 1,008 பால்­குட ஊர்­வலம் நேற்று நடந்­தது.திருத்­தணி அடுத்த, முருக்­கம்­பட்டு கிரா­மத்தில், மன்­னா­ரீஸ்­வரர் கோவில் உள்­ளது. இக்­கோ­விலின் கும்­பா­பி­ஷேகம், கடந்த மாதம், 12ம் தேதி நடந்­தது. இதைய­டுத்து, நேற்று, மண்­ட­லா­பி­ஷேக விழா நடந்­தது. விழாவை முன்­னிட்டு கோவில் வளா­கத்தில், ஒரு யாக சாலை மற்றும், 18 கல­சங்கள் வைத்து கண­பதி ஹோமம் நடத்­தப்­பட்­டது. காலை, 10:00 மணிக்கு மூலவர் அம்­ம­னுக்கு சிறப்பு தீபா­ரா­தனை நடந்­தது. நண்­பகல், 11:00 மணிக்கு, 1,008 பெண்கள் பால்­கு­டங்­களை தலையில் சுமந்­த­வாறு முக்­கிய வீதிகள் வழியாக, கோவில் வளாகம் வரை ஊர்­வ­ல­மாக வந்­தனர்.பின்னர், மூலவர் அம்­ம­னுக்கு பால் அபி­ஷேகம் நடத்­தப்­பட்­டது. தொடர்ந்து சிறப்பு அலங்­காரம் மற்றும் தீபா­ரா­தனை நடந்­தது. மதியம் பக்­தர்­க­ளுக்கு அன்ன­தானம் வழங்­கப்­பட்­டது. மாலை, 6:30 மணிக்கு உற்சவர் அம்மன் சிறப்பு அலங்­கா­ரத்தில், எழுந்­த­ருளி திரு­வீ­தி­யுலா வந்து பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்தார். இதற்­கான ஏற்­பா­டு­களை கோவில் நிர்­வா­கிகள் மற்றும் பொது மக்கள் செய்­தி­ருந்­தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !