உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / துலுக்காத்தம்மன் கோவிலில் 6ஆம் வார ஆடித் திருவிழா

துலுக்காத்தம்மன் கோவிலில் 6ஆம் வார ஆடித் திருவிழா

மது­ராந்­தகம்: தீட்­டாளம் கிரா­மத்தில் உள்ள துலுக்­காத்­தம்மன் கோவிலில், 6ஆம் வார ஆடித் திரு­விழா கோலா­க­ல­மாக நடந்­தது.மது­ராந்­தகம் அடுத்த தீட்­டாலம் கிரா­மத்தில், புகழ் பெற்ற அன்னை துலுக்­காத்­தம்மன் கோவில் அமைந்­துள்­ளது.இக்­கோ­விலில், ஆடி மாத 6ஆம் வார திரு­விழா நடந்­தது. விழா­வை­யொட்டி, 25ம் தேதி காலை, 6:௦0 மணிக்கு அம்­ம­னுக்கு காப்பு கட்­டு­தலும், பகல் 12:00 மணிக்கு கரகம் எடுத்­தலும், பக்­தர்­க­ளுக்கு அலகு குத்­துதல் நிகழ்ச்­சியும் நடந்­தது.இதில் பக்­தர்கள் அலகு குத்தி அம்­ம­னுக்கு நேர்த்­திக்­கடன் செலுத்­தினர். பகல் 2:00 மணிக்கு அம்­ம­னுக்கு கூழ்­வார்த்தல் நிகழ்ச்­சியும் நடந்­தது. அதை தொடர்ந்து அம்­ம­னுக்கு சிறப்பு அபி­ஷேக ஆரா­த­னைகள் செய்­யப்­பட்டு, இரவு 9:00 மணிக்கு சிறப்பு அலங்­கா­ரத்தில் அம்மன் பக்­தர்­க­ளி­டையே எழுந்­த­ருளி திரு­வீ­தி­யுலா சென்றார். இதில், ஐநூற்­றுக்கும் மேற்­பட்ட பக்­தர்கள் கலந்­து­கொண்டு அம்­மனை வழி­பட்­டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !