உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எடை­யார்­பாக்கம் மகா­தேவர் கோவில்ரூ.33 லட்­சத்தில் புன­ர­மைப்பு

எடை­யார்­பாக்கம் மகா­தேவர் கோவில்ரூ.33 லட்­சத்தில் புன­ர­மைப்பு

ஸ்ரீபெ­ரும்­புதூர்: எடை­யார்­பாக்கம் மகா­தேவர் கோவிலில், 33 லட்சம் ரூபாய் செலவில், பூங்கா, சுற்­றுச்­சுவர், கோவில் கட்­டடம் சீர­மைப்பு பணி நிறைவு பெற்­றுள்­ளது. ஸ்ரீபெ­ரும்­புதூர் வட்­டத்­திற்கு உட்­பட்­டது எடை­யார்­பாக்கம் கிராமம். இங்­குள்ள ஏரியின் மேற்கு பகு­தியில், பழமை வாய்ந்த மகா­தேவர் கோவில் உள்­ளது. சிதி­லம்­அடைந்து காணப்­பட்ட இக்­கோ­விலை, சமீ­பத்தில், காஞ்­சி­புரம் இந்து சமய அற­நி­லையத்­துறை அதி­கா­ரிகள் ஆய்வு செய்தனர். அப்­போது, அங்­கி­ருந்த கல்­வெட்­டு­களில், இவ்வூர் இடை­யாற்­று­பாக்கம் என்­கிற இரா­ஜ­வித்­யா­தர சதுர்­வேதி மங்­கலம் என்று அழைக்­கப்­பட்­ட­தா­கவும், முதலாம் குலோத்­துங்கன் காலத்தில், கி.பி. 11ம் நூற்­றாண்டில், தூங்­காணை மாட வடிவில், இக்­கோவில் கட்­டப்­பட்­டது தெரி­ய­வந்­தது. இக்­கோ­விலில், திருப்­பா­த­கா­டு­டையார் மகா­தேவர் கரு­வு­றையில் எழுந்­த­ருளி, பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லித்துவந்­துள்ளார். எனவே, வர­லாற்று சிறப்பு மிக்க இக்­கோ­விலை சீர­மைக்க, இந்து சமய அற­நி­லையத்­துறை முடிவு செய்­தது. அதன்­படி, 33 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்­பட்டு, அதில், சுற்று சுவர், கோவிலை சுற்றி பூங்கா, பக்­தர்­களின் வச­திக்­காக நடை­பாதை, சிதி­ல­ம­டைந்த கோவில் சுவர்கள் சீர­மைப்பு பணி துவங்­கி­யது. தற்­போது பணிகள் நிறை­வ­டைந்­துள்­ளன. கோவிலில், ஒவ்­வொரு பிர­தோஷ காலங்­களில் சிறப்பு அபி­ஷே­கமும், ஆரா­த­னையும் நடைப்­பெ­று­கின்­றன. சுற்று­வட்­டார கிராம மக்கள், கலந்­து ­கொண்டு, வழி­ப­டு­கின்­றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !