கிருஷ்ண ஜெயந்தி உற்சவம் நாளை துவக்கம்
மாமல்லபுரம்: மாமல்லபுரம், நவநீத கிருஷ்ணசுவாமி கோவிலில், நாளை (28ம் தேதி) கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்குகிறது.மாமல்லபுரத்தில்,ருக்மணி சத்யபாமா உடனுறை நவநீத கிருஷ்ணசுவாமி கோவில் புகழ்பெற்றது. இங்கு ஆண்டுதோறும், கிருஷ்ண ஜெயந்தி உற்சவ விழா கொண்டாடப்படும். இவ்விழா, நாளை துவங்கி, அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையடுத்து, நாளை மாலை 4:30 மணிக்கு, சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெறும். சுவாமி ஆயர்பாடி எழுந்தருளும் அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.இதேபோன்று, தினமும் மாலையில் சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, தினம் ஒரு அலங்காரத்தில், அவர் காட்சியளிக்கிறார். 29ம் தேதி, ஆலிலை கண்ணன், 30ம் தேதி, வெண்ணைத்தாழி கண்ணன், 31ம் தேதி, கோவர்தணகிரி, அடுத்த மாதம் 1ம் தேதி, சகடாசூர வதம், 2ம் தேதி கோபாலக்கண்ணன், 3ம் தேதி, ஏணிக்கண்ணன், 4ம் தேதி, காளிங்க நர்த்தனம், 5ம் தேதி, ஊஞ்சல் கண்ணன், 6ம் தேதி, ஸ்ரீகிருஷ்ண லீலை, 7ம் தேதி, குழலூதும் கண்ணன் என, காட்சியளிக்கிறார்.மேலும், தினமும் இரவு 7:30 மணிக்கு, ஆராவமுடன், இராதாகிருஷ்ண பாகவதர் ஆகியோர், தினம் ஒரு தலைப்பில், உபன்யாசம் செய்கின்றனர். 8ம் தேதி காலை 10:30 மணிக்கு, திருமஞ்சனம், மாலை 4:30 மணிக்கு, வீதியுலா, 5:30 மணிக்கு, உறியடி கண்ணனுக்கு சிறப்பு வழிபாடு, அதைத்தொடர்ந்து, 6:00 மணிக்கு, உறியடி உற்சவம் நடைபெறும். நவநீத கிருஷ்ணசுவாமி பக்த பஜனை சபா குழுவினர், விழா ஏற்பாடுகள் செய்துள்ளனர்.