நெல்லை டவுன் பஜனை மடத்தில் சுந்தரகாண்டம்
ADDED :4462 days ago
திருநெல்வேலி: நெல்லை டவுன் ஹரிஹர குக பஜனை சபாவில் ஆவணி ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு உலக நன்மைக்காக சுந்தரகாண்டம் பாராயணம் நடந்தது. நெல்லை டவுன் சிருங்கேரி சாரதா பீடம் ஹரிஹர குக பஜனை சபாவில் ராமசாமி சாஸ்திரிகள் தலைமையில் ஆன்மிக வகுப்புகள் நடந்து வருகிறது. பெண்களுக்கு ஸ்லோகம், நாரணீயம், பாகவதம், சவுந்தர்யலகரி ஸ்லோகங்களும், ஆண்களுக்கு ருத்ரம், சமகம், புருஷசுக்தம் உள்ளிட்ட வேத சம்பந்தமான விஷயங்களும் கற்பிக்கப்படுகின்றன. வால்மீகி முனிவர் எழுதிய சுந்தரகாண்டம் பாராயணமும் கற்பிக்கப்படுகிறது. இதில் சுந்தர காண்டம் பயின்றவர்கள் நேற்று ஆவணி ஞாயிற்றுக் கிழமையை முன்னிட்டு உலக நன்மைக்காக ராமர் சன்னதி முன்பு கூட்டு பிரார்த்தனையாக காலை முதல் மாலை வரை சுந்தர காண்டம் பாராயணம் செய்தனர். ஏற்பாடுகளை ஹரிஹர குக பஜனை சபா நிர்வாகிகள், பக்தர்கள் செய்திருந்தனர்.