சுப்புலாபுரம் உடையநாயகி அம்மன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
ADDED :4462 days ago
திருவேங்கடம்: சங்கரன்கோவில் தாலுகா சுப்புலாபுரம் உடைய நாயகி அம்மன் கோயில் வளாகத்தில் நாளை (28ம் தேதி) கிருஷ்ண ஜெயந்தி விழா நடக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாளை (28ம் தேதி) காலை 9 மணி முதல் 11 மணி வரை ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி நடக்கிறது. மாலை 5 மணியளவில் கிருஷ்ண ஜெயந்தி நாம சங்கீர்த்தன வீதி உலாவும், இரவில் பகவான் கிருஷ்ணனின் அவதார நோக்கம் பற்றிய சிறப்புரை, ஆன்மிக வினாடி-வினா மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோயம்புத்தூர் ஹரி பவுண்டேசன் சார்பில் பரிசு வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை சுப்புலாபுரம் ஜெய்கணேஷ், முத்துசாமி ஆகியோர் செய்துவருகின்றனர்.