விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
கோவை: அடுத்த மாதம் 9ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. தெலுங்கு பாளையம், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் தயாராகி வருகின்றன. இப்பகுதிகளில் விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள் ளது. சிலைகளை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வைக்கும்போது, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும்.பூட்டிய வீட்டில்மின் கசிவால் "தீபேரூர்: தொண்டாமுத்தூர் அருகே விராலியூர் ஆதிதிராவிடர் காலனியைச் சேர்ந்தவர் ஆனந்தன். நேற்று மதியம் 1.00 மணிக்கு, பூட்டியிருந்த வீட்டின் ஜன்னல் வழியே திடீரென கரும்புகை வெளியாகியது.இதைக்கண்டு, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் அதிர்ச்சியடைந்து, ஆனந்தன் வீட்டுக்கதவை உடைத்தனர். உள்ளே, மின்கசிவு ஏற்பட்டதில் டிவி, பேன், டேபிள் உள்ளிட்ட பொருட்கள் தீப்பிடித்துஎரிந்து கொண்டிருந்தன. அக்கம், பக்கத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். சுவர்அருகே வைக்கப்பட்டிருந்த காஸ்சிலிண்டர் பகுதிக்கு தீ பரவும் முன் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. டியூகாஸ் கூட்டத்தில் இயக்குனர்கள் ஆஜர் பெ.நா.பாளையம்: துடியலூர் "டியூகாசில் நடந்த அவசரக் கூட்டத்தில் அனைத்து இயக்குனர்களும் கலந்து கொண்டனர். துடியலூரில் உள்ள டியூகாசில் ( துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம்) கடந்த 27ம் தேதி நடந்த நிர்வாக குழு கூட்டத்தில் மொத்தமுள்ள 11 இயக்குனர்களில் தலைவர் உள்ளிட்ட இருவர் மட்டுமே கலந்து கொண்டனர். டியூகாசில் நடக்கும் ஏலம் உள்ளிட்ட அலுவலக பணிகள் தொடர்பாக இயக்குனர்களிடம் கலந்து ஆலோசிப்பது இல்லை என்பதால் இயக்குனர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என புகார் எழுந்தது.இதைத் தொடர்ந்து நேற்று காலை டியூகாஸ் இயக்குனர்களுக்கான அவசர ஆலோசனைக் கூட்டம் தலைவர் சுப்பையன் தலைமையில் நடந்தது. இதில், அனைத்து இயக்குனர்களும் கலந்து கொண்டனர்.