உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு முத்தங்கி காணிக்கை புனே பக்தர் வழங்கல்

ஆஞ்சநேயர் ஸ்வாமிக்கு முத்தங்கி காணிக்கை புனே பக்தர் வழங்கல்

நாமக்கல்: ஆஞ்சநேயர் கோவிலுக்கு, பல லட்சம் ரூபாய் மதிப்பில், புனேவை சேர்ந்த பக்தர்கள் ஒருவர் முத்தங்கி காணிக்கையாக அளித்தார். அவற்றை ஸ்வாமிக்கு அணிவித்து, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், முக்கிய திருவிழா நாட்களில், பல்வேறு மாவட்டம், மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து, ஸ்வாமியை வழிபட்டுச் செல்வது வழக்கம். அதேபோல், பக்தர்கள் காணிக்கையாக தங்க கவசம், வெள்ளி கவசம், கிரீடம், திருநாமம் போன்ற ஆபரணங்களால் செய்யப்பட்ட பொருட்கள், பணம் ஆகியவற்றை செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில், புனேவை சேர்ந்த பாலாஜி என்ற பக்தர், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான முத்தங்கியை காணிக்கையாக செலுத்தினார். அவற்றை, நேற்று மாலை, 4 மணிக்கு, ஸ்வாமிக்கு அணிவித்து சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. முத்தங்கி அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !