உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிருஷ்ண ஜெயந்தி உறியடிவிழா

கிருஷ்ண ஜெயந்தி உறியடிவிழா

கேளம்பாக்கம் : வெளிச்சை ஸ்ரீநிவாச பெருமாள் கோவிலில், கிருஷ்ணஜெயந்தி உறியடிவிழா, நேற்று முன்தினம் வெகுசிறப்பாக நடைபெற்றது. கேளம்பாக்கம் அடுத்த வெளிச்சை கிராமத்தில், 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் உள்ளது.இக்கோவிலில், பிரபலமாக கொண்டாடப்படும் கிருஷ்ணஜெயந்தி உறியடிவிழா நடந்தது. 50 அடி உயரத்தில் உறி அமைக்கப்பட்டு, அதனை மேல் கீழ் இறக்க வாலிபர்கள் குச்சிகளால் அடித்தனர். அப்போது, கூடி இருந்த மக்கள் உறியடிப்பவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். உறிக்காக கட்டப்பட்ட துாண்களில் கீரிஸ் தடவி வழுக்க செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு வாணவேடிக்கை விழா நடந்தது. புன்னை மரம் சேவையில் பெருமாள் அருள் பாலித்தார். இரவு 10:00 அளவில் சுவாமி வீதியுலா வைபவம் நடந்தது. சுவாமி ஊர்வலத்தின் போது, பஜனை பாடல் குழவினர் பெருமாள் பாடல்களை பாடியபடி வந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !