உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாகணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா

மகாகணபதி கோவிலில் கும்பாபிஷேக விழா

பொள்ளாச்சி கோட்டூர் ரோடு சேரன் காலனி மகாகணபதி கோவிலில், கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. இரவு 7:00 மணிக்கு மூல மூர்த்திகள் திருக்குடங்களை இடமாகக் கொண்டு வேள்விச் சாலைக்கு எழுந்தருளல், இரவு 8:00 மணிக்கு முதற்கால வேள்வி, இரவு 8:30மணிக்கு விமான கலசம் நிறுவுதல், எண்வகை மருந்து சாற்றுதல் பூஜையும்; இரவு 9:30 மணிக்கு வேள்வி நிறைவும் நடந்தது. நேற்று காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால வேள்வியும்; காலை 8:00 மணிக்கு திருக்குடங்கள் புறப்படுதல், காலை 8:30 மணிக்கு விமான கும்பாபிஷேகம், காலை 8:45மணிக்கு மூலமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. காலை 10:00 மணிக்கு திருமஞ்சனம், காலை 11:00 மணிக்கு அன்னதானமும் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். சக்தி கலசம் பிரதிஷ்டாபிஷேகம் பொள்ளாச்சி அருகே போடிபாளையம் ஸ்ரீராமர், ஆஞ்சநேயர் பஜனை கோவிலில், சக்தி கலசம் பிரதிஷ்டா அபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி, காலை 4:00 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் இதர ஹோமங்களும்; காலை 7:30 மணி முதல் 10:00 மணி வரை நடைபெற்றது. காலை 11:30மணிக்கு அபிஷேகம், தீபாராதனை, அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் இடம் பெற்றன. பேரூர் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில் ஆஞ்சநேய தாச சுவாமிகள், ஜெகதீச அய்யர் குழுவினர் சக்தி கலசம் பிரதிஷ்டா அபிஷேக விழா நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பஜனை கோவில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !