ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
ADDED :4419 days ago
காரியாபட்டி: காரியாபட்டி பிசிண்டியில் ரெட்டியார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட, ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, வாஸ்து பூஜை, பிரவேசபலி சாந்தி ஹோமம், திசா ஹோமம், கிராமசாந்தி, தீபாராதணை, கோபுர கலச ஸ்தாபனம், பிம்பசுத்தி, சயனாதிவாசம் நடத்தி தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, புண்யாஹவாஜனம், சூர்ய பூஜை, பாராயணம், ஹோமங்கள், ஷபர்சாகுதி, நாடி சந்தனம், மஹாபூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தன. ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ நிவாச பெருமாள் விமான கோபுர கலசத்தில், சக்திவேல் சாஸ்திரியார் தலைமையில், புனித நீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகம் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. ஊர் முக்கியஸ்தர்கள் பாபு, ராஜாராம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரெட்டியார் உறவினர்முறையினர் செய்திருந்தனர்.