உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கச்சேரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

கச்சேரி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

புவனகிரி: புவனகிரி கச்சேரி விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். புவனகிரி கச்சேரி தெருவில் 150 ஆண்டு கால பழமை வாய்ந்த ஸ்ரீ கச்சேரி விநாயகர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் யாகசாலை பூஜைகள் துவங்கி நடந்து வந்தது. நேற்று அதிகாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடாகி 11:05 மணிக்கு கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.புவனகிரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவியில் தர்ம கர்த்தாக்கள் கலியபெருமாள், நாகமையன், ராஜசேகரன் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !