லட்சுமி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம்
ADDED :4419 days ago
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம், லட்சுமி விநாயகர் கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவிலுக்கு, நன்கொடையாளர்கள் மற்றும் இந்து முன்னணியினர் சார்பில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. அதை தொடர்ந்து, கடந்த மாதம், 30ம் தேதி, அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும் கணபதி ஹோமமும் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம், விசேஷ சாந்தி இரண்டாம் கால யாகசாலை பூஜையும், நேற்று காலை, 6:30 மணிக்கு, கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் வீருபொம்மு செய்திருந்தார்.