உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாதாள துர்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பாதாள துர்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேகம்

சாத்தூர்: சாத்தூர் படந்தால் பாதாளதுர்க்கையம்மன் கோயிலில், நேற்று, மகாகும்பாபிஷேகம் நடந்தது. முன்னதாக, <யாகசாலையில் வேதமந்திரங்களுடன் சிறப்புபூஜைகள் நடந்தன. பாதாளதுர்க்கையம்மன், விநாயகர், பைரவர் கோபுர கலசங்களுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கோயிலில் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சாத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் வேலாயுதம், துணைத்தலைவர் செல்வராணி, படந்தால் ஊராட்சித் தலைவர் நல்லதம்பி, துணைத் தலைவர் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !