ராமர் கோவிலில் உறியடி பெருமுடிவாக்கத்தில் திருவிழா
ADDED :4419 days ago
ஊத்துக்கோட்டை: கோதண்டராம சுவாமி கோவிலில், 116வது ஆண்டு உறியடி திருவிழா நடந்தது. எல்லாபுரம் ஒன்றியம், பெருமுடிவாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ளது, கோதண்டராம சுவாமி கோவில். இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும், கிருஷ்ண ஜெயந்தி விழா முடிந்து, பூனர்பூச நட்சத்திரம் வரும் நாளில், உறியடி திருவிழா நடைபெறும். இந்தாண்டு, 116வது ஆண்டு திருவிழா நேற்று நடந்தது. காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து, உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், கோவில் முன் அமர்ந்திருந்தார். அவர் முன், உறியடி திருவிழா நடந்தது. இதில், திரளானவர்கள் உறியை அடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து உற்சவர், கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளில் வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.