உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நவதிருப்பதி கோயில்களுக்கு சர்க்குலர்!

நவதிருப்பதி கோயில்களுக்கு சர்க்குலர்!

ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோயில்களுக்கு சர்க்குலர் பஸ்கள் இயக்க வேண்டும் என்று சுற்றுலாபயணிகளும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். நவக் கிரகங்களுக்கு சுற்றுலா வளர்ச்சி கழகம் மூலம் சிறப்பு சுற்றுலா பேக்கேஜ் திட்டங்கள் செயல்படுத்துவது போல் நவதிருப்பதி களுக்கும் சுற்றுலா பேக்கேஜ் திட்டங்கள் செயல்படுத்தி நவதிருப்பதிகளின் வளர்ச்சிக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வலுப்பெற்றுள்ளது. 108வைண திருப்பதிகள்: பாரத நாட்டின் 108 வைணவ திருப்பதிகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலங்கள் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. அதிலும் மிகவும் முக்கியமான திருப்பதிகளாக நவதிருப்பதிகள், ஸ்ரீவைகுண்டம் ஆழ்வார்திருநகரி ஆகியவற்றை சுற்றியுள்ளது. ஒன்பது கோயில்களும் ஒன்பது கோள்களின் வரிசையில் அமைந்துள்ளது. இவைகளில் ஸ்ரீவைகுண்டம், திருவரகுணமங்கை, திருப்புளிங்குடி, பெருங்குளம், ரெட்டை திருப்பதி, தென்திருப்பேரை, திருக்கோளூர், ஆழ்வார்திருநகரி ஆகிய நவதிருப்பதிகள் 34 கிமீ தொலைவிற்குள் அடுத்தடுத்ததாக ஒன்றுமுதல் ஐந்து கி.மீ தொலைவிற்குள் உள்ளது. மிகவும் புராதனமான கட்டிட கலை நுட்பங்களுடன் சுமார் 1000 முதல் 2000 ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கட்டிடக்கலைக்கு சொந்தமானது.

உலகம் முழுவதும் புகழ் பரவியது: அனைத்து கோயில்களும் பாஞ்சராத்ரம், வைகாசானம் ஆகிய ஆகமவிதிப்படி கட்டப்பட்டுள்ளது. ராஜா கோபுரம், விமானம் ஆகியன மிகவும் விஞ்ஞான நுட்பங்களோடு கட்டப்பட்டுள்ளது. 1990க்கு முன்னர் மிகவும் பாழடைந்து பக்தர்களே சென்று வணங்குவதற்கு பயந்து இருந்தனர். அதன்பிறகு இந்திய கலாச்சார பண்பாட்டு அறக்கட்டளை, தமிழக அறநிலை யை துறைசர்குலர் பஸ்... 7ம் பக்கத் தொடர்ச்சி மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து நவதிருப்பதி கோயில்களை டி.வி.எஸ்.நிறுவனத்தினர் கும்பாபிஷேகம் நடத்தினர். அதன்பின்னர் நின்று போன திருவிழாக்கள் நடத்தப்பட்டது.தேர், தெப்பம் என அனைத்து திருவிழாக்களும் நடக்க துவங்கியது. இதனால் உள்ளூர் முதல் வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிநாடுகள் என கடல்கடந்து நவதிருப்பதிகளின் புகழ் வலைத்தளத்தின் வாயிலாக பரவியது. இதனால் பக்தர்களின் வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. பக்தர்கள் வைகுண்ட ஏகாதசி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் சித்திரை, வைகாசி, மாசி ஆகிய திருவிழாக்கள் நவதிருப்பதியில் சிறப்பாக நடந்து வருகிறது. தற்போது நவதிருப்பதி 9 கோயில்களும் 3 நிர்வாக அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.

ஒரே நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவேண்டும்: நவதிருப்பதி கோயில்கள் அனைத்தும் ஒரே நிர்வாகத்தின் கீழ் இணை ஆணையர் ஒருவரின் நிர்வாகத்தின் கீழ் இந்து சமய அறநிலையதுறை கொண்டு வர ஆவண செய்தால், கோயில்களின் திருவிழாக்கள் டெண்டர்கள் மற்றும் நிர்வாகம் சிறப்பாக செயல்படும் கோயில்கள் நன்கு பராமரிக்கபடும். கோயில்களின் வருமானம் பெருக வாய்ப்புள்ளது. இதனை அறநிலையதுறை உடனடியாக செய்ய வேண்டும் என நவதிருப்பதி பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்வாறு நவதிருப்பதி கோயில்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு அவைகள் அரசு சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்கப்பட வேண்டும்.

சர்க்குலர் பஸ் விடவேண்டும்: மேலும் கோயில்களை மையமாக கொண்டு தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் சார்பில் தங்கும் விடுதிகள் புதிய சுற்றுலா ஸ்தலங்களோடு இவைகளை இணைத்து வரைமுறைபடுத்த வேண்டும். மேலும் நவகிரகங்கள் ஸ்தலங்களாக உள்ள கும்பகோணத்தை மையமாக கொண்ட கோயில்களை இணைப்பதற்கு புதிய பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் பக்தர்கள் பயன்பெற்று வருகின்றனர். அதேபோல் திருப்பதி தேவஸ்தலம் போர்டுடன் இணைந்து திருப்பதிக்கு சுற்றுலா பஸ் இயக்கப்பட்டுள்ளது. இவைகள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இதேபோல் ஸ்ரீவைகுண்டத்தில் இருந்தும், திருச்செந்தூரில் இருந்தும் ஆழ்வார் திருநகரி வரை நவதிருப்பதி ஸ்தலங்களை இணைக்க சுற்றுலாதுறையின் கீழ் அல்லது அரசு போக்குவரத்தின் கீழ் பஸ்கள் தினமும் இயக்கப்பட்டால் பக்தர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது நவதிருப்பதி கோயில்களை இணைக்க புரட்டாசி சனிக்கிழமை, வைகுண்ட ஏகாதசி ஆகிய நாட்களில் திருநெல்வேலி புதிய பஸ்ஸ்டாண்டில் இருந்து அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஆறுக்கும் மேற்பட்ட பஸ்கள் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது. குறைந்த டிக்கட் செலவில் பக்தர்கள் பயன்பட்டு வருகின்றனர். இதேபோல் வாரம்தோறும் சனிக்கிழமை இயக்கினால் பக்தர்கள் சுற்றுலா ஸ்தலங்களாக நவதிருப்பதிகளை தரிசித்து வருவதற்கு உபயோகமானதாக இருக்கும். தமிழகத்தின் சுற்றுலாத்துறை அமைச்சராக ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ.,சண்முகநாதன் இரண்டாவது முறை அமைச்சராகி உள்ளார். தனது சொந்த தொகுதியில் உள்ள நவதிருப்பதிகளை இணைத்து தனி சுற்றுலா ஸ்தலமாக மாற்றினால் அந்த திட்டம் நீங்காமல் மக்கள் மனதில் இடம்பெரும் தனது தொகுதி மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களின் மனதிலும் இடம்பெறுவதற்கு இது திறவுகோலாக அமையும். நவதிருப்பதி சுற்றுலா ஸ்தலமாக அறிவிக்கப்பட்டு தங்கும் பயணியர் மாளிகை, ஹோட்டல்கள், ஸ்டால்கள் ஆகியவை சேர்ந்து ஆதிச்சநல்லூர் தொல்லியல் மையம் மிகவும் அருகில் உள்ளதால் அங்கு அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சி மையம், தாமிரபரணி ஆற்றில் படகு சவாரி நவதிருப்பதி சுற்றுலா என சுற்றுலாத்துறை திட்டமிட்டால் திருநெல்வேலி,தூத்துக்கடி மாவட்டத்தில் சுற்றுலாத்துறையின் மூலம் வருமானம் இருமடங்காகும். வேலையில்லாமல் இருக்கும் பல ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !